மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக ‘மினிபஸ்’ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Must read

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மினிபஸ் சேவையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் மினி பஸ் சேவை தொடங்கப்பட்டது. மாநில போக்குவரத்துக் கழகத்தில் 210 சிற்றுந்துகள் உள்ள நிலையில் தற்போது 66 சிற்றுந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தற்போது மினி பஸ் சேவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகே உள்ள பகுதிகளுக்கும், பேருந்து நிலையங்களுக்கும் இடையே இயக்கப்படும் வகையில் பேருந்து சேவையை இன்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்க சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது,  போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மெட்ரோவுடன் இணைந்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 66 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது,  முதற்கட்டமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, மெட்ரோ ரயில் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது. ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, 12 சிற்றுந்துகள் இன்று முதல் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து குன்றத்துாருக்கு இயக்கப்படும் சிற்றுந்து, பல்லாவரம், பொழிச்சலுார், பம்மல், அனங்காபுத்துார் வழியாக குன்றத்துாருக்கு இயக்கப்படுகிறது.

More articles

Latest article