சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீண்டும் கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2ந்தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதில்  ஆளுநர் உரையுடன் சபை தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான (2021)  முதல் கூட்டம், கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2ந்தேதி தொடங்குவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். அதன்படி, காலை 11 மணிக்கு பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை பிப்ரவரி 2-ம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் கூட்டி யுள்ளார். சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட் டத்தில் உள்ள கலைவாணர் அரங் கின் 3-வது தளத்தில் பலவகை கூட்ட அரங்கில் பேரவை கூட்டப் பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது.  கலைவாணர் அரங்கின் 3-ம் தளத் தில் சட்டப்பேரவை அரங்கம் போன்றே பிரத்யேகமாக அரங்கம் அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட் கள் பேரவைக் கூட்டம் நடத்தப்பட் டது.  அதுபோல, வரும் பிப்ரவரி கூட்டத் தொடரையும், கலைவாணர் அரங்கிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அடேயப்பா….! 3நாள் சட்டமன்ற கூட்டத்துக்காக கலைவாணர் அரங்கில் ரூ.1.20 கோடி செலவு..