உ.பி.யில் கொரோனா நோயாளின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்

Must read

உத்தர பிரதேசம்:
த்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரப்தி நதியின் குறுக்கே உள்ள ஒரு பாலத்தில் இருந்து, உடலை அவர்கள் வீசும் காட்சிகளை அந்த வழியாக காரில் சென்ற ஒரு தம்பதி தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 28 ஆம் தேதி நடந்துள்ளது. வீசப்பட்ட உடல் கொரோனாவால் இறந்த நபருடையது என பல்ராம்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவர் உறுதி செய்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபர் 28 ஆம் தேதி இறந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

உடல் பேக் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்,உடலை வீசிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த உடல் மீட்கப்பட்டு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

More articles

Latest article