சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர்,  ரஜினி கட்சி தொடங்கிய பின் கருத்து கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் அவரது தொகுதியான  சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர், மக்களை சந்தித்  நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் விவசாயிகள் போராட்டம், சாதிவாரியான கணக்கெடுப்பு, ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றார்.
தமிழகத்தில் குடிமராமத்து சரியான முறையில் மேற்கொள்ளாததால், பல இடங்களில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், எடப்பாடி அரசு குடிமராத்து பணியில்சாதனை செய்வதாக கூறி வருகிறது. ஆனால்,  அவர்கள்  சாதனை செய்யவில்லை. ஊழல் தான் செய்து வருகின்றனர். ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்கட்சியின் பணி. அது தான் அரசியல் மரபு. அதைத் தான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
முதலமைச்சர் எனக்கு சூட்டியிருக்கும் பட்டம் அறிக்கை நாயகன். அப்படி நான் அறிக்கை நாயகன் என்றால், எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன் என கூறினார். மேலும், தமிழகஅரசின் சாதிவாரியான கணக்கெடுப்புக்கு ஆணையம் என்பது அரசியல் நாடகம் என குற்றம் சாட்டினார்.
2ஜி வழக்கில் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஸ்டாலின், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தவர்,  ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர், அவர்  கட்சி தொடங்கி கொள்கையை அறிவிக்கட்டும், அதற்கு பிறகு பதில் கூறுகிறேன் என்றவர், அவர்  திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் எனசொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை என்றவர்,  தமிழருவி மணியனை ஏன் அருகில் வைத்துக்கொண்டோம் என ரஜினி சொன்னதாகத்தான் எனக்கு தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து இதுவரை நேரடியாக பதில்சொல்லாத மு.க.ஸ்டாலின், இன்று முதன்முறையாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.