சென்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு  வங்கி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன மத்தியஅரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி உள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியும் கூடி போராடி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடருகிறார்கள். டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 12ம் நாளை எட்டியுள்ளது.  இந்த நிலையில்,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு வங்கி தொழிற்சங்கங்கள்  ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து,  அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA)  அறிக்கை வெளியிட்டு உள்ளது. அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய தேசிய வங்கி அலுவலர்கள் காங்கிரஸ் (INBOC) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் போராட்டத்தை உடனே முடீவுக்கு கொண்டு,  மத்திய அரசு தாமாகவே முன்வந்து தேசம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக, அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும். நமது  நாட்டிற்கு  அமைதி தேவை, நாட்டின் முக்கிய பங்குதாரர்களான விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது, ஏனெனில் விவசாயத் துறை மட்டும்தான்,  கொரோனா தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையில்  சாதகமாக செயல்பட்டது, இது அந்தத் துறையின் உள்ளார்ந்த வலிமையை பிரதிபலிக்கிறது” . மேலும், 80 சதவிகிதம் வாக்காளர்கள், பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அர்த்தமுள்ள உரையாடலைத் உடனே தொடங்க வேண்டும் என மத்திய அரசை வெளியிறுத்தி உள்ளது.