நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பூத் வாரியாக துல்லியமாக வெளியிடாமல் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதனையடுத்து பூத் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் அடைங்கிய படிவம் 17-C தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தமுள்ள 62333925 வாக்காளர்களில் 43458875 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படிவம் 17C மூலம் அனைத்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களுடன் வாக்குப்பதிவு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவை யாராலும் மாற்ற முடியாது என்றும் வாக்காளர்களின் வாக்குப்பதிவு தரவு எப்போதும் வேட்பாளர்களிடம் இருக்கும் மற்றும் குடிமக்களுக்கான வாக்காளர் வாக்குப்பதிவு APP இல் 24×7 இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

https://x.com/SpokespersonECI/status/1794317350227136897

தவிர, தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் மீது தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படும் தகவல்களை கண்டித்துள்ளது.