மும்பை:
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியா நோக்கி வருவதாக  உளவுத் துறை (ஐ.பி.) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
a
அந்த கப்பல் மகாராஷ்டிரா அல்ல குஜராத் பகுதியில் கரை ஒதுங்கக்கூடும் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.   இதையடுத்து மும்பை கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மும்பைக்கு வரும் அனைத்து வணிக கப்பல்களையும் கடலோர காவல்படையினர் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து கப்பல்களும் சோதனை செய்யப்படுகிறது. . உளவுத் துறையின் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.  குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர்  உஷார் படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.