ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன்  போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியுற்றார்.

இன்று நடைபெற்ற ஒற்றையர் பாட்மிண்டன்  போட்டியில் உக்ரைன் வீராங்கனை  மரியா உல்டினாவுடன் இந்திய வீராங்னை சாய்னா நேவால் மோதினார். இன்றைய ஆட்டம் 39 நிமிடங்கள் மட்டுமே நடைப்பெற்றது.

        இந்த போட்டியில், 21-18, 21-19 நேர் செட் கணக்கில் சாய்னாவை உக்ரைன் வீராங்கனை உல்டினா தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

       இதன் காரணமாக, சாய்னா மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  இந்திய ரசிகர்களுக்கு நேவால், இன்று நடந்த போட்டியில் தோல்வியுற்று வெளியேறியது ஏமாற்றத்தையே தந்துள்ளது.
2012ல் லண்டன் நடைபற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.