ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது 23-வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
அமெரிக்க நீச்சல் விளையாட்டு அணி மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் 4×100 மீட்டர் மெட்லெ தொடர் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் அபாரமாக நீந்தி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.mic1இத்துடன் ரியோ ஒலிம்பிக்ஸில் மைக்கேல் பெல்ப்ஸ் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில்  பதக்க வேட்டையை ஆரம்பித்த மைக்கேல் பெல்ப்ஸ், இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை பெல்ப்ஸ் வென்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் 5வது தங்கப்பதக்கத்தை பெற்ற பெல்ப்ஸ் இத்துடன் தான் நீச்சல் விளையாட்டிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.