சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

உலக நாடுகளையும், உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தில் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆப்பிரிகாகவில் புதிய வகை கொரோனா பிறழ்வு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது டெல்டா பிளஸ் வைரஸை விட அதிக வேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த வைரஸ் தற்போது பிரேசிலிலும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்து, மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ்க்கு B.1.1.529 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரஸ்  10 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும் அதிவேகமாக பரவும் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசு மாநிலஅரசுகளுக்கு அறிவுறுத்தி இருப்பதன் பேரில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் புதிய வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக விமான நிலைய கவுன்டர்களில் வெப்பநிலையைக் காட்டும் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் இந்த வைரஸ் பயணிகளுக்கு தாக்கப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும் என்றும், பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…