டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி 121.06 கோடி டோசாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ள கொரோனா பாதிப்பு  குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் மேலும்  8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,63,749  ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும்  465 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம, மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து  10,967 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.34% ஆக உயர்ந்துள்ளது

தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,07,019 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 73,58,017 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை121,06,58,262 (121.06 கோடி) பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 63,82,47,889* சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 9,69,354 சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.