மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து  மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை  மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் பிறழ்வு வைரஸ்களாக மாற்றி உலக மக்களை மிரட்டி வந்த நிலையில், தற்போது புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவி வருகிறது. அதி வேகமாக பரவும் இந்த புதிய வைரஸ் 10 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும், இதற்கு B.1.1.529 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பிறழ்வு வைரஸ் டெல்டா பிளசை விட மிக வீரியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பை மீண்டும் தீவிரப்படுத்தும் படி மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா சோதனை மற்றும் ஸ்கிரினிங் டெஸ்ட் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் ஒவ்வொரு நபரும் மும்பை வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்றும், அவர்களின் சோதனை முடிவுக்கு பிறகே சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு டிசம்பர் 15ந்தேதி முதல்வர் சர்வதேச வணிக ரீதியிலான விமான போக்குவரத்தை தொடங்கப்போவதாக அறிவித்து உள்ள நிலை யில், புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…