டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ், 10 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும்,  இந்த பிறழ்வு வைரஸ் டெல்டா பிளசை விட மிக மிக வீரியமானது, அதிவேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதையடுத்து, இந்தியாவில் விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி அத்துடன் கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்கள் குறித்த ஊடக செய்தியின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

அவர் இணைத்துள்ள தடுப்பூசி தொடர்பான பட்டியலில்,  நமது மக்கள் தொகையில் 31.19% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது, கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 8.8 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை 23.3 பேர் என்ற வகையில் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும் என்றும், அப்படியென்றால்தான் டிசம்பர் இறுதிக்குள் சுமார் 60%  மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதை மேற்கோள் காட்டியுள்ள ராகுல்காந்தி,   புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என்றும்,  நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதில் இந்திய அரசு தீவிரம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன்  தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்கள் ஒரு மனிதனின் புகைப்படத்திற்குப் பின்னால் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது என்றும் விமர்சித்து உள்ளார்.

B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…