ஐஸ்வால்,

ன்று நாடு முழுவதும் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் மசோரம் மாநிலத்தில் குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய மாநில கவர்னர், கும்மனம் ராஜசேகரன், குடியரசு தின விழாவுக்கு யாரும் வராததால்,  ஆளில்லா மைதானத்தை பார்த்து குடியரசு தின உரையாற்றினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிசோரம் மாநில கவர்னர்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70-வது குடியரசு தின நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

மக்களின் அடையாளப் பிரதிநிதித்துவம் மற்றும் மிசோராம் மக்களின் நிலைக் குழுவான பிரிசம் அமைப்பும் இன்று குடியரசு தின விழாவில் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

இநத நிலையில், 70-வது குடியரசு தின நிகழ்ச்சி இன்று மிசோரமில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் முற்றிலுமாக புறக்கணித்த நிலையில், அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தேசிய கொடியை ஏற்றிய மாநில கவர்னர்,  மைதானத்தில் நடந்த  ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் இல்லாத மைதானத்தில், தனிமையாக தனது உரையாற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூரில் குடியரசு தினம் புறக்கணிப்பு

அதுபோல மணிப்பூர் நாகலாந்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா நிகழ்ச்சி புறக்கணிக்கப் பட்டது. நாகாலாந்தில் சக்திவாய்ந்த நாகா மாவணவர் கூட்டமைப்பு (NSF) திருத்தப்பட்ட சட்ட மசோதா மக்களுக்கு எதிராக உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. பொதுமக்கள் அறிக்கைகள் மற்றும் எதிர் அறிக்கைகளை குழப்பிக்கொள்ளக் கூடாது என்று தேசிய மாணவர் முன்னணி வலியுறுத்தி வருகிறது.

மணிப்பூரில் ஐந்து பொது சமுதாய அமைப்புகள் குடியரசு தினத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. லாப நோக்கற்ற குழுக்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் சில பொது சமுதாய குழுக்கள் கூட்டாக இணைந்து இந்த புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.