விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது அமுதத்தில் விஷம் கலந்ததற்கு சமம்: முன்னாள் டிஜிபி ஆவேசம்

Must read

திருவனந்தபுரம்:

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்து, அமுதத்தில் கலந்த ஒரு துளி விஷத்துக்கு சமம் என கேரள முன்னாள் டிஜிபி கடுமையாக விமர்சித்துள்ளார்.


இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டுக்கு வழங்கியதாக, 1994-ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கடந்த 1994&ம் ஆண்டு புகார் எழுந்தது.

கேரள போலீஸ், ஐபி, சிபிஐ விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அவர், மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கிடையே அவரை கடந்த 1998-ம் ஆண்டு நிரபராதி எனக் கூறி  உச்சநீதிமன்றம்
விடுதலை செய்தது.

தமக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக மனித உரிமை ஆணையம் மூலம் கேரள அரசிடம் கடந்த 2001-ம் ஆண்டு ஒரு கோடி இழப்பீடு பெற்றார். அதே ஆண்டு இஸ்ரோவிலிருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு விஞ்ஞானத்துக்கான பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இதனை கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் கடுமையாக விமரிசித்துள்ளார்.

தன் மீது பொய் வழக்குப் போட்டதாத நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில் முன்னாள் டிஜிபி சென்குமார் 7 நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சங்பரிவாரின் சேவா பாரதி அமைப்பில் சமீபத்தில் சேர்ந்த சென்குமார், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி அரசை கடுமையாக விமரிசித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்ட உடனேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், இந்த விருதுக்கு நம்பி நாராயணன் தகுதியானவர் இல்லை என்று இஸ்ரோவில் பணியாற்றும் அனைவருக்குமே தெரியும்.

இவர் ஏதோ கண்டுபிடித்ததற்காக இந்த விருது என்கிறார்கள். நீரிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரிக்கும் கண்டுபிடிப்பு போல, பல கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவர்களுக்கு எல்லாம் இதுபோன்ற விருது வழங்கப்படுமா?

நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது, ஒரு துளி விஷத்தை அமுதத்தில் கலந்ததற்கு சமம். இதே நிலை தொடர்ந்தால், கேரளாவில் பாலியல் வன்புனர்வு மற்றும் கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கும் அடுத்த ஆண்டு பத்மபூசன் விருது கொடுப்பார்கள் என்றார் கிண்டலாக.

 

More articles

Latest article