சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கம் செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை உள்பட பல  கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில்,   254 உதவி பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என  உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பச்சைப்பன் அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 254 பேராசிரியர்கள் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பதவி பறிபோக இருந்த 254 உதவி பேராசிரியர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!