சென்னை: அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மெட்ரோ ரயிலின் 2வது கட்டம், மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான திட்டப் பணிகள்  வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின்படி,  கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையப் போகிறது. இது அடையாறு ஆறு மற்றும் சேத்துபட்டு ஏரி ஆகியவற்றின் வழியே செல்கிறது. குறிப்பாக KMC மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே நீருக்கு அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. அதுபோல,  அடையாறு ஆற்றின் கீழும் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் அடையாறு, ஜங்ஷனில் நிலத்தடிக்கு கீழே மெட்ரோ நிலையம்  அமைக்க உள்ளது.  இதில்,  கிரீன்வேஸ் ரோடு மற்றும் அடையாறு ஜங்ஷன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15-ந்தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  மேலும்,  கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க ரெயில் நிலையம் அமைப்பதற்காக 300 மீட்டர் நீளத்துக்கு ரெயில் நிலைய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அத்துடன், கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் அமைக்கப்படும் சுரங்க ரெயில் நிலையத்துக்கான தரைதளத்துக்கான காங்கிரீட் தற்போது போடப்பட்டு உள்ளது. 48 மணிநேரத்துக்கு பிறகு அடுத்த கட்டப்பணிகள் இங்கு தொடங்க இருக்கிறது. அடுத்த வாரம் சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் எந்திரம்) பொறுத்தப்பட உள்ளது. இந்தபணி நிறைவடைந்த உடன் டிசம்பர் 15 முதல் 20-ந்தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு பணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது.

ஏற்கனவே சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைத்துள்ள போல,  அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு…