சென்னை

மிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   இம்முறை கொரோனா பாதிப்பின் வேகம் மற்றும் எண்ணிக்கை மட்டும் இன்றி மரணமடைவோர் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக உள்ளது.  இதனால் மருந்துகளின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மிகவும் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் ஊசி மருந்து கருதப்படுகிறது.  இதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அரசே இந்த மருந்து விநியோகத்தைக் கையில் எடுத்து மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் வழங்கி வருகிறது.   இங்குக் கூட்டம் அலைமோதுவதால் இ|ங்கேயே கொரோனா அதிக அளவில் பரவலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் இதற்காக நோயாளியைச் சேர்ந்தவர் யாரும் கியூவில் நின்று அரசிடம் வாங்க வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

மாநிலத்தில் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளதையொட்டி மத்திய அரசு தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.  அதன்படி இதுவரை 2,05,000 மருந்துகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அது 3,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.