குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் கொரோனாவால் 4,218 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அதே அரசு பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 58,068 என்று இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 65805 பேர் உயிரிழக்க காரணம் என்ன என்று கேட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி : குஜராத் : 71 நாட்களில் 4218 பேர் மட்டுமே இறந்ததாக கூறிய நிலையில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரபல நாளேடு தகவல்

4218 மரணங்கள் மட்டுமே கொரோனாவால் நிகழ்ந்தது என்றால், மற்ற மரணங்கள் நிகழந்தது எப்படி என்று தெரிவிக்க முடியுமா என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.