விமானி பணி நேரத்தில் மது அருந்தலாமா? : நாடாளுமன்றத்தில் கேள்வி

Must read

டில்லி

நாடாளுமன்றத்தில் விமானிகள் பணி நேரத்தில் மது அருந்தலாமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பல கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தருவது வழக்கமாகும்.   இவற்றில் ஒரு சில கேள்விகள் நகைப்புக்குரியதாகவும் ஒரு சில கேள்விகள் சர்ச்சைக்குரியதாகவும் அமைவதும் உண்டு.

மக்களவை உறுப்பினர் ஒருவர், “விமானத்தில் பணி புரிவோரும், விமானிகளும் பணி நேரத்தில் மது அருந்தலாமா? அல்லது விமானிகள் குறிப்பிட்ட அளவு மது அருந்திவிட்டு விமானம் ஓட்ட அவர்களுக்கு அனுமதி அளிக்க அரசிடம் திட்டம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா அளித்த பதிலில்

“விமானிகள் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு விமானத்தை இயக்க அனுமதிக்க அரசு திட்டமிடவில்லை.   மேலும் நடப்பாடு ஜூன் மாதம் பணி நேரத்தில் மது அருந்தி விட்டு வந்த 14 விமானிகள் மீஇது வழக்கு பதிவு செய்து அவர்கல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article