டில்லி

டிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்க கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.    இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்ததையொட்டி தற்போது ஃபாஸ்டாக் முறை அமலில் உள்ளது.   இதன் மூலம் முன்பே செலுத்தப்பட்ட தொகையிலிருந்து ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் இந்த சுங்க கட்டணம் தொடர்பாகக் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.  இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்தார்.

அந்த பதிலில், “

“கடந்த 2008 முதல் தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலம், புறவழிச்சாலை, சுரங்கப்பாதை உள்ளிட்டவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.   இதன்படி மாதாந்திர பயண அட்டை வழங்கி மாதத்துக்கு அதிகபட்சமாக 50 முறை பயன்படுத்த மூன்றில் 2 பங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது.   இந்த நிதி ஆண்டில் இது ரூ.315 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த சலுகை சுங்கச்சாவடிகளுக்கு 20 கிமீ தொலைவில் வசிப்போரின் வர்த்தகமில்லாத வாகனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது”

எனத் தெரிவித்துள்ளார்.