ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரொனா தடுப்பூசி : மத்தியப் பிரதேச சுகாதார ஊழியர் கைது

Must read

சாகர்

ரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட மத்தியப் பிரதேச மாநில சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   நாடெங்கும் தற்போது மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  தற்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சிறப்பு சிரிஞ்சுககளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்னும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாகர் நகரில் ஜிதேந்திரா என்னும் சுகாதாரப் பணியாளர் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்.  இதையொட்டி ஜிதேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் காவல்துறை இவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

More articles

Latest article