ஸ்ரீநகர்:

பிரிவினைவாதிகள் சார்பில் காஷ்மீரில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சோபியன் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ மேஜர் ஆதித்யா என்பவரின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய தடை விதித்தது. 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் ஜம்முவில் நாளை (16ம் தேதி) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.