டில்லி: ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பர செலவு 300% அதிகரிப்பு

Must read

டில்லி:

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் விளம்பர செலவு 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டில்லி காங்கிரஸ் ஆட்சியில் விளம்பரங்களுக்கு ரூ 17.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

2015ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி நாளிதழ், டி.வி, ரேடியோ, இணையதளம் உள்ளிட்ட பல ஊடக விளம்பரங்களுக்கு முதல் ஆண்டு ரூ 59.9 கோடி, 2ம் ஆண்டில் ரூ 66.3 கோடி, 3ம் ஆண்டு டிசம்பர் வரை ரூ 85.3 கோடி செலவு செய்துள்ளது. சுமார் ரூ 70.5 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியை விட 300 சதவீதம் அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் கவர்னர் ஆட்சியில் ரூ. 97 கோடி செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article