டில்லி:

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் 2007ம் ஆண்டு நீரின் அளவை குறைத்து  கடந்த 2007ம் ஆண்டு விசாரணையின்போது, 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில், தற்போதைய வழக்கில் தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கோரியிருந்த நிலையில்  தற்போது 177.25 என்று குறைத்துள்ளது.

இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.