காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

Must read

டில்லி:

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி அளவுக்கு இருப்பதால், காவிரி நீர் பங்கிட்டில் நீரின் அளவை குறைப்பதாக அறிவித்துள்ள உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு குறைந்துள்ள நீர்ன் அளவை கர்நாடகாவுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பின்படி 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், காவிரி நடுவர் மன்றம்  2007ம் ஆண்டு நீரின் அளவை குறைத்து 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில்,  தற்போது நீரின் அளவை  177.25 என்று குறைத்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவில் இருந்து 14.75 டிஎம்சி அளவு குறைந்துள்ளது.

தமிகத்திற்கு குறைந்த நீரின் அளவை கர்நாடகா குடிநீருக்காக வழங்குவதாக உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பதாகவும், இந்த வழக்கில் இனிமேல் மேல்முறையாடு செய்ய முடியாது என்றும்  அறிவித்து உள்ளது.

More articles

Latest article