சென்னை: செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதன்மூலம் தென்மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளது.

சென்னை எழும்​பூர்- திருச்செந்தூர் இடையே இயக்​கப்​படும் செந்தூர் விரைவு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்​னை​யில் இருந்து திருச்​செந்​தூருக்கு செல்​லும் பக்​தர்​கள் வசதிக்​காக, செந்​தூர் விரைவு ரயில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயில் தினசரி மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்​பட்​டு, மறு​நாள் காலை திருச்​செந்​தூரை சென்​றடைகிறது. இந்த ரயிலுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு உள்​ளது.

இந்த ரயில் மூலம்   முரு​கக் கடவுளின் அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடாக திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள், அண்டை மாநிலங்​களில் இருந்து நாள்​தோறும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். இதனால் இந்த ரயிலில் எப்போதும், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது

இதனால்,கூடுதலாக மேலும் பல பெட்டிகள் இயக்க வேண்டும் என அ கோரிக்களை எழுந்தன.  அந்த கோரிக்கைகளை ரயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படடி, வழக்கமாக இயக்கப்பட்டு வரும 18 பெட்டிகளுடன்  கூடு​தலாக 5 பெட்​டிகள் நிரந்​தர​மாக இணைக்​கப்​பட​வுள்​ளது. இதன் மூலம்,  செந்தூர் எக்ஸ்பிரஸ் இனிமேல் 23 பெட்​டிகளும் இயக்கப்படுகிறது. இந்த   கூடு​தல் பெட்​டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படு​கிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

‘இதன்மூலம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்,  முதல் வகுப்பு ஏசி பெட்​டி, இரண்​டடுக்கு ஏசி பெட்டி தலா ஒன்​று, மூன்​றடுக்கு ஏசி பெட்டி 3, இரண்​டாம் வகுப்பு 3 அடுக்கு தூங்​கும் வசதி பெட்டி 12, பொது பெட்டி 4, லக்​கேஜ் வகுப்​புடன் பொது பெட்டி 2 என மொத்​தம் 23 பெட்​டிகள் இணைக்​கப்​பட​வுள்​ளன.

 

[youtube-feed feed=1]