சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களில்  வைக்கப்பட்டிருந்த மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை அகற்றிவிட்டு அதில்,  விஜய்யின் புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிச்சாமி  கடும்  கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற சில நாட்களில், மாநிலம்  முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீர்படுத்தி, மீண்டும் சுவையான உணவு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து,  கடந்த ஆட்சிகளால் முறையான பராமரிப்பின்றி கிடந்த அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், அம்மா உணவங்களை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வந்து ஏழை மக்கள் பசியாற்றிய மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படம் பல ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தது. தற்போது விஜய் அரசு,அந்த புகைப்படங்களை அகற்றிவிட்டு,  அதில் விஜய் படத்தை பொருத்தி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ரிரு வாரங்கள் தான் ஆகின்றது. புதிதாக பதவியேற்று இருக்கும் தவெக அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், அதற்குள் எதையும் சொல்ல முடியாது, அவர்கள் ஆட்சி நடத்துவது குறித்து தற்போதே எதுவும் சொல்ல முடியாது என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட சிலர் கூறியிருந்தனர். ஆனாலும் எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கொண்டு தான் வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், அம்மா உணவகங்களில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்களை நீக்கிவிட்டு பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் புகைப்படத்தை வைத்திருப்பது கடும் கண்டனங்களுக்கு உட்பட்டது. அம்மா உணவகம் என்று சொன்னாலே உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் உள்ளங்களிலும் தோன்றுவது அம்மா அவர்களின் திருவுருவம் தான்.

அவ்வாறு வரலாற்றில் நிற்கும் அம்மா உணவகங்களில் இருக்கும் அம்மாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு உங்களுடைய புகைப்படத்தை வைத்தால் அம்மா உணவகம் உங்களின் திட்டம் என மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ? அனைத்தையும் இன்ஸ்டாகிராம் parallel universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதலமைச்சர் உணர வேண்டும்.
உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அம்மாவின் புகைப்படத்தை நிறுவுவதுடன் அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையை உடனடியாக செயல்படுத்துமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் .

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கின்றார்.

[youtube-feed feed=1]