சென்னை: தமிழகத்​துக்கு 9.91 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்​டும் என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில், தமிழகத்​தின் சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், நீர்வளத்துறை தலைமை அதிகாரி யில் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்லியில் நடைபெற்றது. இது  காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 51-வது கூட்​டமாகும. இந்த கூட்டத்தில்  தமிழகத்​தின் உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​ துறை செய​லா​ளர் சத்​யபிரதா சாகு, சென்னை தலை​மைச் செயல​கத்​திலிருந்து காணொலிக் காட்சி வாயி​லாகப் பங்​கேற்​றார்.

இந்தகூட்டத்தில் காவிரி நீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்து. இதில் பேசிய தமிழக உறுப்​பினர் சத்திய பிரதா சாகு, மேட்​டூர் அணை​யின் தற்​போதைய நீர் இருப்பு 40.742 டிஎம்​சி​யாக உள்​ள​தாகத் தெரி​வித்​தார். தற்​போது, அணை​யில் இருந்து குடிநீர் தேவை, தொழிற்​சாலை பயன்​பாடு மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு கரு​தி, விநாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்​படு​வ​தாக​வும் அவர் குறிப்​பிட்​டார்.

மேலும், நடப்பு நீர்ப்​பாசன ஆண்​டில் (2025-26), ஜூன் 1 முதல் மே 24-ம் தேதி வரை பில்​லி குண்​டுலு​வில், தமிழகத்​துக்கு வழங்​கப்பட வேண்​டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். ஆனால், கர்​நாடக அணை​களில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட உபரி நீரை​யும் சேர்த்து மொத்​தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்​துக்​குக் கிடைத்​துள்​ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட  கர்​நாடக உறுப்​பினர், தாங்​கள் வழங்​கிய உபரி நீரை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தார்.

ஆனால்,  கர்​நாட​கா​வின் இந்த வாதத்தை தமிழக உறுப்​பினர் சத்​யபிரதா சாகு எதிர்த்​தார்.

கர்​நாடகம் தனது நீர்த்​தேக்​கங்​களில் தேக்க முடி​யாமல், வேறு வழி​யின்றி வெளி​யேற்​றிய உபரி நீரினைத் தங்​களுக்கு சாதக​மாக சொந்​தம் கொண்​டாட முடி​யாது என்​றும், அதனைத் தமிழகத்​துக்கு வழங்​கிய கணக்​கில் சேர்க்க இயலாது என்​றும், அவர் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் அறிக்​கை​யின்​படி, மே 26-ம் தேதி கேரளா​வில் தென்​மேற்கு பரு​வ​மழை தொடங்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இப்​பரு​வ​மழை இயல்​பான அளவில் இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​வ​தா​லும், கர்​நாடக அணை​களில் போதிய நீர் இருப்பு உள்​ள​தா​லும், வரும் ஜூன் மாதத்​துக்கு தமிழகத்துக்கு வழங்​கப்பட வேண்​டிய 9.91 டிஎம்சி நீரை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி பில்​லிகுண்​டுலு​வில் கர்​நாடகம் உறுதி செய்ய வேண்​டும் எனத் தமிழக அரசு சார்​பில் காவிரி நீர்மேலாண்மை ஆணை​ய கூட்​டத்​தில்​ வலி​யுறுத்​தப்​பட்​டது.

[youtube-feed feed=1]