கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் கான்ட்ராக்ட் பணிகளுக்கும் 10 சதவீதம் கமிஷன் பெறுவதாக அக்கட்சியின் தேஜ்பூர் எம்பி ராம் பிரசாத் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு செய்தி சேனல் சமீபத்தில் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அப்பே £து ராம் பிரசாத் சர்மா இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். நீர்பாசன துறை அமைச்சர் ரஞ்சத் தத்தா எனது மகனுக்கு ஒரு கான்ட்ராக்ட ஒதுக்க ரூ. 87 ஆயிரம் கமிஷன் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான உரையாடல் விபரம்…

ஷர்மா: இங்கு இது தான் பிரச்னை. இதற்கு முதல்வர் சர்பனந்த சோனாவால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். நான் இந்த விஷயத்தை தீவிரமாக கூறுகிறேன். எந்த அலுவலகம், எந்த அமைச்சர் என்று என்னிடம் கேட்க வேண்டும்.

ஷர்மா: அமைச்சர் பரிமல் சுக்லாபாய்தியாவை தவிர அனைத்து அமைச்சர்களும் தங்களது சொந்த கான்ட்ராக்டரை வைத்துள்ளனர். அப்படி என்றால் அது அவர்களது சொந்த கான்ட்ராக்ட் அல்லது நிறுவனமாக இருக்கலாம். அனைத்து அமைச்சர்களுக்கும் இப்படி இருக்கிறது. தற்போது எம்எல்ஏ.க்களும் இதை தொடங்கிவிட்டனர்.

நிருபர்: சமீபத்தில் அஸ்ஸாம் தலைமைச் செயலக அதிகாரிகளிடம் ரூ. 40 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியது என்ன ஆனது:

ஷர்மா: அவர்கள் அனைவரும் அமைச்சர் ரஞ்சித் தத்தாவின் ஆட்கள். அவர் வீட்டில் ஒரு ஏஜென்சியும், அலுவலகத்தில் ஒரு ஏஜென்சியும் வைத்துள்ளார். அவரிடம் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் பணம் இருக்கிறது. நீர்பாசன துறையில் ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான பணிகள் நடந்துள்ளது. இதில் அமைச்சரின் பங்கு மட்டும் ரூ. 57 ஆயிரம் கோடி.

நிருபர்: இது உண்மையா?

ஷர்மா: எனது மகனுக்கு ரூ. 29 லட்சம் மதிப்பிலான ஒரு கான்டராக்ட் ஒதுக்கியதற்கு தத்தா ரூ. 87 ஆயிரம் கமிஷன் பெற்றுக் கொண்டார்.

நிருபர்: உங்கள் மகனிடம் இருந்தா:

ஷர்மா: ஆம்.

நிருபர்: அந்த பணம் எங்கு செல்கிறது?

ஷர்மா: தத்தாவுடன் இருக்கும் ஒரு நபர் தான் இதை எல்லாம் கவனிக்கிறார். அவரிடம் தான் செல்கிறது.

இவ்வாறு அந்த உரையாடல் நடந்தது.

கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாம் போலீசார் நீர்பாசன துறை செயலாளர் குஜேந்திர தோலாய் செயலாளர் அலுவலகத்தில் இருந்து ரூ. 40 லட்சத்தை கைப்பற்றினர்.

அதை அலுவலக அறையில் இருந்த டிஜிட்டல் லாக்கரில் இருந்து போலீசார் கைப்பற்றினர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.