ண்டிகர்

ஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியின் இடைத்தேர்தலில் பா ஜ க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மேல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தொகுதியின் பா ஜ க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ஸ்வரண் சாலரியா.   இவர் மீது ஏற்கனவே  இந்தியக் குற்றவியல் சட்டங்கள் 306, 376, மற்றும் 420ன் கீழ் குற்றச்சாடுக்கள் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பெண் சாலரியா மீது தன்னை பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார்.  45 வயதான இந்தப் பெண்மணி மும்பையை சேர்ந்தவர்.  தனக்கு சிறுவயதில் இருந்தே சாலரியாவை தெரியும் என்றும் தன்னை 1984 முதல் 2014 வரை திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை காட்டி பலமுறை தன்னுடன் பாலுறவு கொண்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளர்   முதலில் தன்னை ஒரு பேயிங் கெஸ்டாக ஒரு இடத்தில் தங்க வைத்திருந்ததாகவும் பின்பு தனக்காக ஒரு வீட்டை அடுக்கு மாடி குடியிருப்பில் வாங்கித் தந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

 

அந்தப் பெண் தானும் சாலரியாவும் நெருக்கமாக இருந்ததாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.   மும்பைய சேர்ந்த தொழிலதிபரான பா ஜ க வேட்பாளர் ஸ்வரன் சாலரியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.   தனது பொது வாழ்வில் களங்கத்தை உண்டாக்க அந்தப் பெண் பொய்ப் புகார் அளித்துள்ளதாக கூறி உள்ளார்.

இதற்கிடையே  காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் சாலரியா மேல் புகார் அளித்துள்ளனர்.  அவர் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்கு பற்றி தெரிவிக்காததையும், தற்போது அவர் மேல் பலாத்கார குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளதாலும் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.