இந்தூர்,
போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த  பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக பல சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் நகரில் உள்ள மத்திய சிறையிலும் ‘சிமி’ இயக்கத்தினர் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போபால் சிறைச்சாலை
போபால் சிறைச்சாலை

போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் சேர்ந்து அதிகாலை சிறைக் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு சிறைச்சாலையின் மதில்சுவரை தாண்டி குதித்து, தப்பிச் சென்றுள்ளனர்.
சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, போர்வையை கயிறாக பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். மாநிலம் முழுவதும் போலீசார் சல்லடைபோட்டு தேடி வந்தனர்.
தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோபால் புறநகர் பகுதியான இன்ந்த்கெடி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர், தீவிரவாதிகள் ஜாகீர் உசேன், மெகபூப், அப்துல் மஜித், மொகமத், முஜீப் ஷிக், மொகத் ஹலித் அகமத், ஜாகீர் உசேன் ஷாகித் உள்பட 8 பேரை  சுட்டுக் கொன்றனர்.
இதில் ஜாகீர் உசேன், மெகபூப் என்ற தீவிரவாதிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஆவர்.