இந்திரா காந்தி நினைவுநாள்: ஜனாதிபதி – தலைவர்கள் அஞ்சலி

Must read

டில்லி,
முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் இருப்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் இந்திராகாந்தி. அவரது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிகக்கப்படுகிறது.
இதையொட்டி புதுடெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் இன்று பேரணியாக சென்றனர்.

ராகுல் பேரணி, உடன் காங்கிரஸ் தலைவர்கள்
ராகுல் பேரணி, உடன் காங்கிரஸ் தலைவர்கள்

ஆண்டுதோறும் டெல்லி ராஜ்கோட் பகுதியில் உள்ள அவரது  நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
ஆனால், டெல்லியில் பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக இந்திரா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தலம் மூடப்பட்டு பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து இந்திரா காந்தி முன்னர் வசித்த வீடாக இருந்து,  தற்போது இந்திரா அருங்காட்சியகமாக மாறியுள்ளது. அங்குள் படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி
ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, அவரது  தலைமையில் நினைவுநாள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
துணைஜனாதிபதி அமித் அன்சாரி
இந்திரா காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள  அவரது புகைப்படத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

இந்திராவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
rahul

More articles

Latest article