புதுச்சேரி

ன்று முதல் பள்ளிகள் திறப்பதையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.  இடையில் திறக்கப்பட்ட போதிலும் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.  அனைத்து வகுப்புக்களும் இணையம் மூலமே நடந்து வந்தன.

தற்போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  இங்கு நேற்று புதுச்சேரியில் 115 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,23,572 ஆகி உள்ளது. இங்கு இதுவரை 1,812 பேர் உயிர் இழந்து 1,21,045 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

எனவே இன்று முதல் புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “கொரோனா குறித்த பயத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்.  மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்.  மேலும் எச்சரிக்கையாக இருங்கள்” என அறிவுரை அளித்துள்ளார்.