கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது.

மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருவதாகக் கூறியுள்ளது.

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களிலேயே இந்த சி.1.2 வகை உருமாறிய வைரஸ் ஆண்டுக்கு சராசரியாக 41.8 முறை உருமாறும் தன்மை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மற்ற வகை உருமாறிய கொரோனா வைரஸை விட இரு மடங்கு அதிகம்.

ஆகஸ்ட் 13 நிலவரப்படி சீனா, காங்கோ, மொரீசியஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்விசர்லாந்து ஆகிய நாடுகளில் சி.1.2 வகை கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களையும் இந்த சி.1.2 என்ற புதுவகை வைரஸ் தாக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு விமான போக்குவரத்து தளர்வுகளால், இந்தியாவிலும் இந்த வகை வைரஸின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது, மேலும், இந்த வகை வைரஸ்கள், வேகமாகப் பரவக்கூடியது என்பதால், இந்தியாவில் இவ்வகை கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கொல்கத்தாவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் உபாசனா ரே கூறியிருக்கிறார்.