95 நாட்களுக்குப் பிறகு நடக்க முயற்சி செய்யும் யாஷிகா….!

Must read

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா ஹேரியர் கார், நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. காரின் பின் இருக்கைகளில் இருந்த ஆண் நண்பர்கள் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் குணமடைய சில மாதங்கள் வரை ஆகும் என முன்னதாக நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில், உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு, காயத்திலிருந்து மீண்டு வரும் நடிகை யாஷிகாவின் புதிய மருத்துவமனை புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. யாஷிகா , அவரது தாயார் மற்றும் அவரது செல்லப்பிராணி என மூவரும் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More articles

Latest article