ஜெய்யின் ‘சிவசிவா’ படத்தின் அம்மம்மா பாடல்….!

Must read

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் சிவ சிவா திரைப்படத்தை தனது முதல் படமாக லென்டி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

நடிகர் ஜெயின் 30வது திரைப்படமாக தயாராகும் சிவசிவா திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜெய்.

சிவசிவா திரைப்படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . மேலும் காளி வெங்கட் மற்றும் பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த சிவசிவா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிவசிவா திரைப்படத்தின் அடுத்த பாடலாக “அம்மம்மா” என்ற புதிய பாடல் தற்போது வெளியானது. நடிகர் ஜெய்யின் இசையில் பாடலாசிரியர் யுகபாரதி அருமையான வரிகளில் வெளிவந்துள்ளது.

More articles

Latest article