சென்னை: நடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47)  சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதலமைச்சர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அரசுத் தரப்பிலும் அதற்கான உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 நடிகர் முத்துக்காளை அவரது மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துல்செல்லபபட்டுள்ளது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி ‌என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது.இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த நடிகர்கள ஒருவர் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை. கடந்த ஆண்டுதான்தனது மகன் தேர்வில் பாஸ் ஆகிவிட்டான் என்றும் வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என சந்தோஷமாக கூறிய முத்துக்காளை இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளார். அதற்கு காரணம் அவரது மனைவியின் திடீர் மரணம் தான்.

முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு  காரணமாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.  தன்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது என்றும் தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு உதவ வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் வீடியோ மூலம் சமீபத்தில் முத்துக்காளை கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உரிய உதவிகளை செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முத்துக்காளை மனைவி மாலதி உயிரிழந்தது அவரையும் அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, அவர் தனது மனைவியின் உடலை அவரது  சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி ‌என்ற திருக்கோதையாபுரத்துக்கு ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டுச் செல்கிறார். முத்துக்காளைக்கு சினிமா பிரபலங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]