சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகும் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ந்தேதி வெளியாகிறது.

இதுகுறித்து கூறிய கல்வி அமைச்ச்ர ராஜ்மோகன், மே 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும், 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் அமைச்சர் ராஜ்மோகன் கூறியது: “ கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றவர், ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
1 முதல் 3-ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகிறது. ஜூன் 1 முதல் புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பாடத் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்ககனவே கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு நேரடியாக அனுப்பப்படும் என்றும், மாணவர்கள் எந்த மொபைல் எண்களை கொடுத்திருக்கிறார்களோ அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்வு வெளியான 10 நிமிடங்களுக்குள் அனைத்து மாணவர்களும் தங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]