சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்ளள நிலையில்,  கொரோனா தடுப்பு மற்றும், பொதுமுடக்கம்  மற்றும் தளர்வுகள் குறித்து அப்போது விவாதிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையைத் தவிர மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின்  பல பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, கொரோனா பரவல் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 24ந்தேதி (நேற்று) தமிழகதலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜூலை31 ஆம் தேதி  முடியவுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுடன் புதிய தளர்வுகள் என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து அடுத்த வாரம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
சமீபத்தில்,  பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.