சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருட்களை தடுக்கும் வகையில் ஆபரேசன் கஞ்சா 2.0 என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி வேட்டையை நடத்தி வந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டத்தை அறவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி, “ஆபரேஷன் கஞ்சா 2.0” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா, குட்கா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து பல இடங்களில் கஞ்சா உள்பட போதை பொருட்களை தடுப்பு வேட்டை நடைபெற்றது. இதன் காரணமாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலகோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னையில்,  சென்னையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, சென்னை வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ், ராஜ்குமார், பெருங்குடியை சேர்ந்த ஜோஸ்வா ஆகியோர் கைதாகினர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆபரேசன் கஞ்சா 2.0 என்னாச்சு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“ஆபரேஷன் கஞ்சா 2.0”: கஞ்சா விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம்…

ஆபரேஷன் கஞ்சா 2.0: கடந்த 3நாளில் மட்டும் 2034 பேர் கைது, 6.5 டன் குட்கா பறிமுதல்…

சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்: 7 நாளில் 45 கிலோ கஞ்சா பறிமுதல், 54 பேர் கைது!

கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…