டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற  பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினர் பதவியில் இருந்து  20 மாநிலங்களைச் சேர்ந்த 59 மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் ஓய்வுபெற உள்ளனர்.  இந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரியாவிடை  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரதமர்  மோடி பேசும்போது, “ மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன; அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளனர் என கூறி    நாடாளுமன்ற வாழ்க்கைக்கும் ஆட்சிமுறைக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.

மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர். தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது.

மேலும், பேசும்போது, மூத்த தலைவர்களின் மரபுகளை எடுத்துரைத்தார், புதியவர்களுக்கு வழிகாட்டுதலை ஊக்குவித்தார், மேலும் நாடாளுமன்ற மரபுகளின் தொடர்ச்சியை வலியுறுத்தினார். , ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தங்கள் பதவிக்காலம் முடிந்து இம்மன்றத்தை விட்டு விடைபெறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது போன்ற தருணங்களில், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் நாம் ஒன்றிணைகிறோம். அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் அனுபவமும், பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.