மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து விஷால் ஸ்ரிவாஸ்தவா, ராஜ் சிங், மயங்க் மிஸ்ரா ஆகியோர் பிடிபட்டனர்.
பாலி அருகே டோல் கேட் ஒன்றில் UPI மூலம் கட்டணம் செலுத்திய தடயத்தின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

புதன்கிழமை இரவு, வட 24 பர்கானாஸ் மாவட்டம் மத்தியம்கிராமில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ரத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் முன் இருக்கையில் இருந்த அவரை, வழி மறித்த கார் பின்னர் பைக்கில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். பின்னர் மற்றொரு கார், பைக்கில் தப்பினர்.
CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் டோல் கேட் ஒன்றில் UPI மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது. இதன் மூலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொழில்முறை குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்தனர். விஷால் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை திருடப்பட்டவை என்றும், காரில் போலி எண் பலகை பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதாகவும், 2–3 நாட்கள் முன்பு கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினார்.
[youtube-feed feed=1]