செங்கல்பட்டு: சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூரை சேர்ந்தவர் ஆராவமுதன். இவர்  காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமாக இருந்து வருகிறார். இவர் நேற்று இரவு  கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்துள்ளார். அப்போது, திடீரென மர்ம நபர்கள் ஆராமுதன் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி காரியில் இருந்த இறக்க வைத்ததுடன்,  அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர்  ரத்தவெள்ளத்தில்  மிதந்த ஆராவமுதனை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே ஆராமுதன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வண்டலூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சமீபகாலங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்த குற்றச்செயல்கள் முன்னிலும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது ஒரு கை துண்டு துண்டாக வெட்டப்பட்டது. இடது தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த உயிரிழந்தார்.

வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக 70க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.