பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடி 12 நாட்களாகியும் இன்னும் தீரவில்லை. என் அரசியல் வாழ்வில் இப்படிப்பட்ட நெருக்கடியை நான் சந்தித்ததில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்தார்.
naidu
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமராவதியில் அவர் பேசும்போது, “ எனது அரசியல் வாழ்வில் இப்படிப்பட்ட நெருக்கடியை நான் சந்தித்ததில்லை. விசாகப்பட்டினம் உதூத் புயலால் பாதிக்கப்பட்டு நகரமே உருக்குலைந்த போது கூட 8 நாட்களில் சகஜநிலை திரும்பியது. ஆனால் 12 நாட்களாகியும் இந்தப் பிரச்சனையை தீர்க்கமுடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் காட்டிவரும் பொறுமை போற்றுதலுக்குரியது. வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் இன்னல் தீர்க்க பாடுபடவேண்டும்.
மேலும், ரிசர்வ் வங்கி நிலைமையை சமாளிக்க 2,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அவற்றில் 400 கோடி 100 ரூபாய் நோட்டுக்கள். இந்தப் பணம் கிராமப்பகுதிகள் உட்பட அனைத்து இடங்களுக்கும் தடையின்றி சென்று சேர வழிவகைகள் செய்யப்படும்” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.