சென்னை

மிழகத்தில் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. அதேவேளையில் 10 முதல் 12 வகுப்புக்களுக்கு நேரஎடி வகுப்புக்கள் நடக்க உள்ளன,   இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 10முதல் 12 வகுப்புக்களுக்கும் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், ”சென்னை உயர்நீதிமன்றம் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது. இது எல்லாமே கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான் என்பதில் ஐயம் இல்லை..

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைத்து வந்தது.  மாணவர்களுக்கு மன ரீதியாகக் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூட கூறியிருந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.  கொரோனாவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது.

தவிர 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளது. அத்துடன் அவர்களுக்குத் தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. தடுப்பூசி மூலம் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவையெல்லாம் குறித்து ஏற்கெனவே கலந்தாலோசித்து வருகிறோம், இனி வரக்கூடிய கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார்.