சென்னை: மதுரை வடக்குதொகுதியில் போட்டியிட, திமுகவில் இருந்த விலகிய டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்,  மருத்துவர் சரவணன் என்ற பெயரை, பாஜக தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் என அங்குள்ள பாரதியா ஜனதா கட்சியினர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  இதில், மாநில பாஜக தலைவர்,  எல்.முருகன் போட்டியிடுகிறார் தனி தொகுதியான தாராபுரத்தில் களமிறங்கியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியை மிகவும் எதிர்பார்த்த நடிகை குஷ்புக்கு  ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, பாஜக தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கப்பட்டு உள்ளார். அங்கு கமலை எதிர்த்து  நிற்கிறார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா  காரைக்குடியிலும்,  அரவக்குறிச்சியில் அண்ணாமலை, மதுரை வடக்கு- டாக்டர் பி சரவணன், திருநெல்வேலி – நாயனார் நாகேந்திரன் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.

இதில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் டாக்டர் பி.சரவணன், இதுவரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு கட்சித்தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அதிருப்தி அடைந்த சரவணன், பாஜகவில் இணைந்தார். உடனே அவருக்கு, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது.

இதை மதுரை மாவட்ட பாரதியஜனதா கட்சியினர் சிறிதும் எதிர்பார்க்காத நிலையில், அவரது பெயரை வானதி சீனிவாசன் என நினைத்துக்கொண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர்தான் தெரிந்தது, அங்கு போட்டியிடும் நபர் திமுகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் என்பது. இதனால், பாஜக தலைமைமீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைமீது கடும் கோபத்தில் உள்ளனர்.