நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியானது.

லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் முக்கிய பணிகள் துவங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்க உள்ளார். சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது.