சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். நாளை மாலை, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து வீடியோவில்,  எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.

இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

வீடியோ உதவி: Thanks to ABP