திருச்சி: பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 27-ந்தேதி முதல் வரும் 2-ந்தேதி வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே கோட்டம் ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ரயில் சேவை மாற்றங்கள்:
குருவாயூரில் இருந்து வரும் 27-ந்தேதி முதல் வரும் 2-ந்தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16128), விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக இந்த ரயில் செல்லாது.
தூத்துக்குடியில் இருந்து வரும் 27-ந்தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 17616), விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த ரயில் அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து வரும் 28-ந்தேதி பகல் 12.05 மணிக்கு புறப்படும் பிகானீர் அணுவ்ராத் அதிவிரைவு ரயில் (எண்: 22631), மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக இந்த ரயில் செல்லாது.
கன்னியாகுமரியில் இருந்து வரும் 29-ந்தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்: 17070), மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த ரயில் அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
நாகர்கோவிலில் இருந்து வரும் 30-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16354), திண்டுக்கல்லில் இருந்து கரூர் சென்றடையும். அன்று இந்த ரயில் திருச்சி வழியாக செல்லாது.
எர்ணாகுளத்தில் இருந்து வரும் 3-ந்தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி வாராந்திர ரயில் (எண்: 16363), விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக இந்த ரயில் செல்லாது/
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]